/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரங்கசாமி மாஸ்டர் பிளான்: பா.ஜ.,வினர் 'ஷாக்'
/
ரங்கசாமி மாஸ்டர் பிளான்: பா.ஜ.,வினர் 'ஷாக்'
ADDED : ஏப் 19, 2026 04:40 AM
புதுச்சேரியில் தே.ஜ., கூட்டணியில் கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்., கூட்டணியில் 9 தொகுதியில் போட்டியிட்டு 6 தொகுதியில் வென்ற பாஜ., உள்துறை, ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சபாநாயகர், 3 நியமன எம்.எல்.ஏ.,1 ராஜ்யசபா, 1 லோக்சபா என, மொத்தம் 8 பெரிய பதவிகளை லாவகமாக முதல்வரிடம் இருந்து தட்டி சென்றது.
அத்தேர்தலில் 10 தொகுதியில் வென்ற என்.ஆர். காங்.,க்கு முதல்வர், 3 அமைச்சர், துணை சபாநாயகர், அரசு கொறடா, டில்லி மேலிடப் பிரதிநிதி என வெறும் 7 பதவிகள் மட்டுமே கிடைத்தது.
அதனை தொடர்ந்து கடந்தாண்டு முதல்வருக்கு விருப்பமே இல்லாத பா.ஜ. அமைச்சர் மாற்றம், தான் விரும்பாத கட்சியுடன் கூட்டணி அமைப்பு என முதல்வரை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது. இந்நிலையில் விரைவில் வெளியாக உள்ள தேர்தல் முடிவுகளில், தான் எதிர்பார்க்கும் அளவிற்கு பாஜ., வெற்றி பெற்றால் மட்டுமே அமைச்சர் பதவி உள்ளிட்ட பத விகள் வழங்கப்படும், குறைவான தொகுதிகளில் வெற்றி பெற்றால் அதக்கேற்ப பதவிகளை ஒதுக்கலாம் என, முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
முதல்வரின் முடிவு பா.ஜ.,விற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

