/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கார்டு இ-கே.ஓய்.சி., பதிவு முகாம் துவங்கியது
/
ரேஷன் கார்டு இ-கே.ஓய்.சி., பதிவு முகாம் துவங்கியது
ரேஷன் கார்டு இ-கே.ஓய்.சி., பதிவு முகாம் துவங்கியது
ரேஷன் கார்டு இ-கே.ஓய்.சி., பதிவு முகாம் துவங்கியது
ADDED : ஆக 30, 2025 11:48 PM

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் ரேஷன் கார்டு இ - கே.ஓய்.சி., பதிவு செய்யும் சிறப்பு முகாமை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு குடிமைபொருள் வழங்கல் மற்றும் விவகாரங்கள் துறை, ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் கட்டாயம் இ-கே.ஓய்.சி., பதிவு செய்ய வேண்டுமென அறிவித்துள்ளனர்.
இதையொட்டி, லாஸ்பேட்டை தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில், எம்.எல்.ஏ., அலுவலகத்தில் ரேஷன் கார்டு இ-கே.ஓய்.சி., பதிவு செய்யும் சிறப்பு முகாம் நேற்று துவங்கியது.முகாமை வைத்தியநாதன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
வரும் 6ம் தேதி வரை நடக்கும் முகாமில், தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது அசல் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் உள்ள மொபைல் போன் ஆகியவற்றை கொண்டு வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒன்றாக வரவேண்டிய அவசியம் இல்லை. தனித்தனியாக கூட வந்து பதிவு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.