ரேஷன் கார்டுகள் ரத்து செய்யவில்லை அமைச்சர் சிவக்கொழுந்து திட்டவட்டம்
ரேஷன் கார்டுகள் ரத்து செய்யவில்லை அமைச்சர் சிவக்கொழுந்து திட்டவட்டம்
ADDED : ஆக 31, 2026 07:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் எந்தவொரு ரேஷன் கார்டும் ரத்து செய்யப்படவில்லை என அமைச்சர் சிவக்கொழுந்து சட்டசபையில் திட்டவட்டமாக தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் 38 ஆயிரம் ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்தாக சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் சராமரியாக குற்றச்சாட்டினர். இது பெரும் விவாதமாக எழுந்தது.
இதற்கு பதிலளித்து குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சிவகொழுந்து பேசியதாவது:
புதுச்சேரியதில் 38 ஆயிரம் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மையற்றது. பயனாளிகள் தாமாக முன்வந்து ஒப்படைக்கும் போது, பெயர் நீக்கம் கோரும் போது அல்லது அட்டை காலாவதியானது எனக் கண்டறியப்படும் சூழலில் மட்டுமே ரத்து செய்யப்படும்.
தகுதியான குடும்பங்களை அடையாளம் காண மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் தரவுகளுடன் ஒப்பீடு செய்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 19,349 அட்டைகளில், இறந்த உறுப்பினர்கள் மற்றும் இரட்டை அட்டைகள் நீக்கப்பட்டு 15,944 அட்டைகள் விரிவான சரிபார்ப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் முன்னுரிமைக்கான தகுதியைப் பூர்த்தி செய்யாத புதுச்சேரியைச் சேர்ந்த 6,303, காரைக்காலின் 453, ஏனாமின் 117 மற்றும் மாகேவின் 6 அட்டைகள் என மொத்தம் 6,879 அட்டைகள் முன்னுரிமை இல்லாத வகைக்கு மாற்றப்பட்டுள்ளன.
தபிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உணவு மானியத் தொகை, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இனி மின்னணு நாணயம் வடிவில் பயனாளிகளின் மின்னணுப் பணப்பையில் நேரடியாக வரவு வைக்கப்படுகின்றது. இப்புதிய முறையில் இதுவரை 1,65,644 ரேஷன் அட்டைகள் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
