/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரேஷன் கடை ஊழியர்கள் வாக்காளர் அட்டையை கொட்டி போராட்டம்
/
ரேஷன் கடை ஊழியர்கள் வாக்காளர் அட்டையை கொட்டி போராட்டம்
ரேஷன் கடை ஊழியர்கள் வாக்காளர் அட்டையை கொட்டி போராட்டம்
ரேஷன் கடை ஊழியர்கள் வாக்காளர் அட்டையை கொட்டி போராட்டம்
ADDED : மார் 01, 2024 02:56 AM

புதுச்சேரி: மாவட்ட கலெக்டரை பேரணியாக சென்று சந்தித்த ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ரேஷன் கடைகளில் 172 நிரந்தர ஊழியர்கள்,356 தினக்கூலி ஊழியர்கள் என மொத்தம் 528 பேர் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு 55 மாதம் சம்பளம் வழங்கப்பவில்லை.
அத்துடன் ரேஷன் கடைகளையும் திறக்கவில்லை. இதனை கண்டித்து பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதுன் தொடர்ச்சியாக நேற்று பாரதிய புதுச்சேரி நியாயவிலைக் கடை ஊழியர்கள் முன்னேற்ற நலச்சங்கம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தட்டாஞ்சாவடி குடிமை பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு இ.சி.ஆர்., ராஜிவ் சிக்னல்,வழுதாவூர் சாலை வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். பின் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து, ரேஷன் கடைகளை திறக்காதாதல் வாழ்வாரத்தை இழந்து நிற்கின்றோம்.
எனவே, எங்களின் அடையாளமாக உள்ள அசல் வாக்காளர் அடையாள அட்டையை தங்களிடம் ஒப்படைக்கின்றோம் எனக் கூறி கலெக்டர் மேசையில் கொட்டிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

