முதல்வர் சாதனைகளை பட்டியிட தயாரா? மாஜி முதல்வர் நாராயணசாமி சவால்
முதல்வர் சாதனைகளை பட்டியிட தயாரா? மாஜி முதல்வர் நாராயணசாமி சவால்
ADDED : செப் 28, 2026 05:43 PM
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி தனது சாதனைகளை பட்டியல் போட்டு பேச தயாரா என முன்னாள் முதல்வர் நாராயணசாமி சவால்விட்டுள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தீவிர சிறப்பு வாக்காளர் திருத்தப்பணியில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. ஞானேஷ்குமார் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார். இரண்டு கட்டங்களில் 13 கோடி வாக்களர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதில் மேற்குவங்கத்தில் 97 லட்சம் பேர், தமிழகத்தில் 1 கோடி பேர், புதுச்சேரியில் 1 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் தீபக் சாந்து, விவேக் மிஸ்ரா ஆகியோர் தொடர்ந்து 10 மாதங்களில் 14 ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளனர். ஞானேஷ்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் போர்க் கொடி துாக்கியுள்ளன.
நடுநிலையோடு இருக்கவேண்டிய சபாநாயகர் அன்பழகன், தேர்தல் பிரசாரத்திற்கு செல்கிறார். இது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறியதாகும். இதனால் தேர்தல் துறை அசோக் ஆனந்த் தேர்தலில் நிற்க தகுதிய இல்லாதவர் என அறிவிக்க வேண்டும். 2021 முதல் 2024 வரை 147 கொலைகள் நடந்துள்ளன. தற்போது ஒரு மாதத்தில் ஏழு கொலைகள் நடந்துள்ளன. ஆனால் போலீசாருக்கு குடியரசு வண்ணக் கொடியை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் வருகிறார்.
முதல்வர் தன்னுடைய சாதனைகளை பட்டியல் போட்டு மக்கள் மத்தியில்பேச தயாரா என நான் சவால் விடுகிறேன். கடற்கரையில், மின் விளக்கு கம்பம் விழுந்து ஒரு குழந்தை இறந்ததற்கு யார் பொறுப்பேற்க போகின்றனர். இடைத்தேர்தலில் காங்., வேட்பாளர் விநாயகம் அமோக வெற்றி பெறுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
