/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொழிலதிபர், மாஜி அரசு ஊழியரிடம் மோசடி செய்த ரூ.1.09 கோடி மீட்பு
/
தொழிலதிபர், மாஜி அரசு ஊழியரிடம் மோசடி செய்த ரூ.1.09 கோடி மீட்பு
தொழிலதிபர், மாஜி அரசு ஊழியரிடம் மோசடி செய்த ரூ.1.09 கோடி மீட்பு
தொழிலதிபர், மாஜி அரசு ஊழியரிடம் மோசடி செய்த ரூ.1.09 கோடி மீட்பு
ADDED : செப் 21, 2024 06:24 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் மற்றும் தொழிலதிபரிடம் இருந்து மோசடி கும்பலால் அபகரிக்கப்பட்ட 1.09 கோடி ரூபாயை சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன்; ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர். சமீபத்தில் புனோ சென்று வந்தார். இவரை நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட மர்ம நபர், மும்பை சி.பி.ஐ.,யில் இருந்து பேசுவதாகவும், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பல கோடி பணம் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்களை வீட்டு காவலில் வைக்கிறோம். எங்கு செல்ல கூடாது என, மிரட்டினர். பயந்து போன தீனதயாளன் வெளியே செல்லாமல் 2 மணி நேரம் காத்திருந்தார்.
தீனதயாளன் வங்கி கணக்கில் உள்ள பணம், சொத்து விபரங்களை கேட்டு பெற்ற மர்ம நபர்கள், வங்கி கணக்கில் உள்ள 34 லட்சம் பணத்தையும் அனுப்பினால், உங்கள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்வதாக கூறினர். இதை நம்பி, தீனதயாளன், தனது வங்கி கணக்கில் இருந்த 34 லட்சம் பணத்தை, மர்ம நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.
இத்தகவலை தனது நண்பருக்கு தெரிவித்த பிறகு ஏமாற்றப்பட்டதை அறிந்த தீனதயாளன் இரவு 11:00 மணிக்கு, சைபர் கிரைம் போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார். போலீசார் உடனடியாக மர்ம நபரின் வங்கி கணக்கை முடக்கினர். அதில் 1 கோடி ரூபாய்க்கு மேல் பணம் உள்ளது தெரியவந்தது.
மேட்டுப்பாளையம் தொழிலதிபர் பால்பாண்டி. இவரை நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட மர்ம நபர், சி.பி.ஐ.,யில் இருந்து பேசுவதாகவும், உங்கள் பெயர் கொண்ட பார்சல் தைவான் நாட்டிற்கு செல்வ தாக உள்ளது. அதை பிரித்து பார்த்தபோது, போதை பொருட்கள், சிம் கார்டுகள், போலி பாஸ்போர்ட்கள் உள்ளது. உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உங்களை போதை பொருள் தடுப்பு பிரிவு விசாரிக்கும் என கூறினார்.
பின், பால்பாண்டியை தொடர்பு கொண்ட நபர், உங்கள் வங்கி கணக்கில் இருந்து பல கோடி பணம் வெளிநாட்டிற்கு சென்றுள்ளது. உங்களை வீட்டு காவலில் கைது செய்து வைக்கிறோம். வெளியே செல்ல கூடாது, யாரிடமும் பேச கூடாது என, மிரட்டினர்.
வங்கி கணக்கில் உள்ள பணம் குறித்து கேட்டறிந்தனர். நீங்கள் எவ்வித தவறும் செய்யாதவர் என்றால், உங்களின் நேர்மையை பரிசோதிக்க வேண்டும். போன் இணைப்பை துண்டிக்காமல், உங்கள் வங்கி கணக்கில் உள்ள 75 லட்சம் பணத்தை எங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்புங்கள். 10 நிமிடத்தில் அந்த பணத்தை உங்களுக்கே அனுப்பி விடுகிறோம். வழக்கில் இருந்தும் விடுவித்து விடுகிறோம் என கூறியுள்ளனர்.
அதை நம்பி பால்பாண்டி, 75 லட்சம் பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றார். அங்கு, மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு ஆர்.டி.ஜி.எஸ்., மூலம் பணம் அனுப்ப முயற்சித்தார். இதை அறிந்த ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மேலாளர், சந்தேகப்பட்டு சைபர் கிரைம் போலீசாரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். போலீசார் அறிவுரைப்படி, பணம் அனுப்புவது நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த இரு சம்பவங்களிலும் சைபர் கிரைம் போலீசாரின் விழிப்புணர்வு காரணமாக ரூ. 1.09 கோடி பணம் காப்பாற்றப்பட்டது.
சீனியர் எஸ்.பி., கலைவாணன் கூறுகையில். 'சமீப காலமாக உங்களது பெயரில் அனுப்பட்ட பார்சலில் போதை பொருள் கடத்தப்படுகிறது,
மும்பை சைபர் கிரைமில் இருந்து பேசுகிறோம் என ஸ்கைப் வீடியோ காலில் வந்து மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இணைய வழியில் வரும் மிரட்டல்களை நம்பி யாரும் பணத்தை அனுப்பி ஏமார வேண்டாம்' என்றார்.