UPDATED : நவ 01, 2026 06:08 PM
ADDED : நவ 01, 2026 06:06 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: சுப்பையா நகர் புத்துக்கரு மாரியம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த மரத்தின் கிளைகளை அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., சொந்த செலவில் வெட்டி அகற்றினார்.
தட்டாஞ்சாவடி தொகுதி, சுப்பையா நகர் புத்துக்கரு மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தில் விஷப் பூச்சிகள் அதிகளவில் உள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதேபோல், சுப்பையா நகர் பூங்காவில் உள்ள அரச மரத்திலும் விஷப்பூச்சிகள் இருப்பதால், அங்கு விளையாட வரும் மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தகவலறிந்த அசோக் ஆனந்த் எம்.எல்.ஏ., தனது சொந்த செலவில் ஊழியர்களை கொண்டு, பொதுமக்களுக்கு இடையூறாக விஷப் பூச்சிகள் அதிகம் இருந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
