UPDATED : நவ 01, 2026 06:20 PM
ADDED : நவ 01, 2026 06:16 PM

பாகூர்: புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம் சார்பில், கிருமாம்பாக்கம் ஏரிக்கரையில், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழு சார்பில், ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நிலையான வாழ்க்கை முறை வாரத்தையொட்டி, கிருமாம்பாக்கம் ஏரிக்கரையில், மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மோகன்தாஸ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நடும் பணியை துவக்கி வைத்தார். புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செயலர் ரமேஷ் முன்னிலை வகித்தார். அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளரர் தன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
புளியம், கொடுக்கப்புளி, நாவல், புன்னை, ஆலமரம் உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த மரக்கன்றுகள் புவியிடக் குறியீடு முறையில் பதிவு செய்யப்பட்டு, அவற்றின் வளர்ச்சி மற்றும் உயிர் வாழ்வு தொடர்ந்து கண்காணிக்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை, புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமத்தின் திட்ட அலுவலர்கள் இளங்கோ, சாந்தலட்சுமி, தினேஷ், விமல்ராஜ், பிரபு, ஸ்ரீநிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
