நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : போக்குவரத்திற்கு இடையூராக வைக்கப்பட்டிருந்த பேனர், பேனர் சேனல்கள், முட்டுகளை கொம்யூ., பஞ்சாயத்து ஊழியர்கள் நேற்று அதிரடியாக அகற்றினர்.
நெட்டப்பாக்கம்-மடுகரை, கரியமாணிக்கம்-மதகடிப்பட்டு சாலைகளில் சட்டத்திற்கு விரோதமாக சிலர் பேனர் வைத்திருந்தனர். மேலும் சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள் சாலையின் பிளாட்பாரத்தை ஆக்கிரமித்து கடை பிளக்ஸ் வைத்திருந்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக பாதிக்கப்பட்டது.
நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்., ஆணையர் ரமேஷ் உத்தரவின் பேரில், கொம்யூ., பஞ்சாயத்து ஊழியர்கள் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து சட்ட விரோத பேனர்களை அதிரடியாக அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றிய கொம்யூ., பஞ்., ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

