தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரை திருடி சென்றதாக விற்பனையாளர் மீது புகார்

 காரை திருடி சென்றதாக விற்பனையாளர் மீது புகார்

 காரை திருடி சென்றதாக விற்பனையாளர் மீது புகார்


ADDED : ஜன 02, 2026 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2026 04:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காரை திருடிச் சென்றதாக விற்பனையாளர் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ரெட்டியார்பாளையம், பாலாஜி நகரை சேர்ந்தவர் ஹரிஹரன், 43. இவர், புதுச்சேரியில் பழைய கார் விற்பனை செய்யும் விஜய் என்பவரிடம், ஹூண்டாய் வெர்னா காரை (பி.ஒ. 05 வி.டி), வாங்க, 10.5 லட்சம் ரூபாய் விலை பேசினார். அதற்கு முன்பணமாக, 99 ஆயிரம் ரூபாயை, கடந்த ஜூலை 16ம் தேதி, ஜி.பே., மூலம் கொடுத்தார்.

பின், ஹரிஹரன் வைத்திருந்த பழைய காரை, 7 லட்சம் ரூபாய்க்கு எக்சேஞ் செய்தார். மீதி 2.51 லட்சம் ரூபாயை, காசோலையாக கொடுத்து, காரை வாங்கினார்.

இந்நிலையில், ஹரிஹரன் குடியிருக்கும் அப்பார்ட்மென்டில் தனது காரை நிறுத்தியிருந்தார். கடந்த 14ம் தேதி, கார் காணாமல் போனது. அங்குள்ள சி.சி.டி.வி., கேமராவை ஆய்வு செய்த போது, இரண்டு நபர்கள் சாவி போட்டு, காரை எடுத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, காரை விற்ற விஜய், ஆட்களை வைத்து மாற்று சாவி மூலம் தனது காரை எடுத்துச் சென்றாதாக ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us