/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேட்டி, சேலைக்கு பணம் வழங்க கோரிக்கை
/
வேட்டி, சேலைக்கு பணம் வழங்க கோரிக்கை
ADDED : ஜன 02, 2025 11:04 PM
புதுச்சேரி: ஆதிதிராவிடர்களுக்கு வேட்டி, சேலைக்கு பதிலாக பணமாக தர வேண்டும் என, புதுச்சேரி மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
பொங்கலையொட்டி ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில், வேட்டி, சேலை வாங்குவதற்கான பணம், அவர்கள் கணக்கில் போடப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு பணத்திற்குப் பதிலாக வேட்டி சேலை வழங்கப்படுகிறது. இப்படி, நடந்தால் தரமற்ற வேட்டி சேலை தான் கொடுக்கப்படும்.
ஏனெனில் அரசு இதற்காக செலவிடும் தொகையில் பாதிக்குமேல் கமிஷனாக சென்று விடும். மீதி உள்ள பணத்தில் கணக்கு காட்டுவதற்காகவேட்டி, சேலை தரப்படும். மக்கள் இதை விரும்பவில்லை.
அது பொது நலனுக்கு எதிரானது கூட.எனவே, அரசு சென்ற ஆண்டு இத்திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியில் 10 சதவீதம் உயர்த்தி அதனை ஒவ்வொரு குடும்பத்தின் கணக்கிலும்செலுத்த வேண்டும். இத்துறை செயல்படுத்தும் எந்தத் திட்டமும் திருப்திகரமாக இல்லை. இதைப் பற்றிய விரிவான அறிக்கையை விரைவில் கவர்னரிடம் சமர்பிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

