/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மறைந்த முன்னாள் நீதிபதிக்கு அரசு மரியாதை அளிக்க கோரிக்கை
/
மறைந்த முன்னாள் நீதிபதிக்கு அரசு மரியாதை அளிக்க கோரிக்கை
மறைந்த முன்னாள் நீதிபதிக்கு அரசு மரியாதை அளிக்க கோரிக்கை
மறைந்த முன்னாள் நீதிபதிக்கு அரசு மரியாதை அளிக்க கோரிக்கை
ADDED : ஜன 18, 2026 06:42 AM

புதுச்சேரி: ஓய்வு பெற்ற நீதிபதி தாவீது அன்னுசாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு அரசு மரியாதை அளிக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சர் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரி லப்போர்த் வீதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற நீதிபதி தாவீது அன்னுசாமி. 99 வயதான அவர், உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
21-10-1927 அன்று பிறந்த அவர், சென்னை உயர்நீதி மன்றத்தில், நீதிபதியாக பணியாற்றினார். புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப்பள்ளியில் 1946ம் ஆண்டு ஆசிரியராக பணியாற்றியுள்ளார். புதுச்சேரி சட்டக்கல்லுாரியில் 1972-74ம் ஆண்டில் ஆசிரியராகவும், வெங்காலுார் தேசிய சட்டக் கல்லுாரி பல்கலைக்கழகத்தில் 1987- 93ம் ஆண்டில் ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
மேலும், பல்வேறு உயர் பதவிகளில் வகித்த அவருக்கு, அரசு மரியாதை செலுத்த வேண்டும் என, தி.மு.க., அவைத் தலைவர் சிவக்குமார், அலையன்ஸ் பிரான்சே நல்லாம் சதீஷ் உட்பட பல்வேறு அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
அவரது இறப்பிற்கு அரசியல் தலைவர்கள், பல்வேறு அமைப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

