sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பணி நியமன அறிவிப்பு தேதி முறைகேடு; புதிய அறிவிப்பை வெளியிட கோரிக்கை

/

 பணி நியமன அறிவிப்பு தேதி முறைகேடு; புதிய அறிவிப்பை வெளியிட கோரிக்கை

 பணி நியமன அறிவிப்பு தேதி முறைகேடு; புதிய அறிவிப்பை வெளியிட கோரிக்கை

 பணி நியமன அறிவிப்பு தேதி முறைகேடு; புதிய அறிவிப்பை வெளியிட கோரிக்கை


ADDED : மார் 11, 2026 04:02 AM

Google News

ADDED : மார் 11, 2026 04:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பணி நியமன அறிவிப்பு தேதியில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளை அடுத்து, புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் என, புதுச்சேரி பெற்றோர் மாணவர்கள் நல சங்க தலைவர் பாலா கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை; கடந்த 2023ம் ஆண்டு விளம்பரத்தின் அடிப்படையில், நடந்து வரும் ஆட்சேர்ப்பு செயல்முறை, 3 ஆண்டுகள் தேவையற்ற தாமதத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த செயல்முறையை முடிக்க தவறியதுடன், சில பணியிடங்களை மட்டும் பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.

பொது வேலை வாய்ப்பில் சம வாய்ப்பை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 16வது, பிரிவை மீறுவதாக உள்ளது. இந்த தாமதத்தினால் கடந்த 2023 முதல் 2026க்குள் படிப்பை முடித்து தற்போது, தகுதியுடைய ஆயிரக்கணக்கான உள்ளூர் பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

2023ம் ஆண்டு அறிவிப்பின் நோக்கத்தை பாதியிலேயே மாற்றுவதும், சில பதவிகளை தேர்ந்தெடுத்து ரத்து செய்வதும், இந்த சட்ட கோட்பாட்டிற்கு எதிராக உள்ளது. வரும் சட்டசபை தேர்தல் முடிந்தவுடன் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களுக்கு, புதிய அறிவிப்பை வெளியிட பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us