/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆக்கிரமிப்பில் இருந்த அரசு குடியிருப்பு மீட்பு
/
ஆக்கிரமிப்பில் இருந்த அரசு குடியிருப்பு மீட்பு
ADDED : ஏப் 12, 2025 07:25 AM

பாகூர்; கரையாம்புத்துாரில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு குடியிருப்பை, வருவாய் துறை அதிகாரிகள் மீட்டனர்.
நெட்டப்பாக்கம் அடுத்த கரையாம்புத்துாரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அதில், ஒரு வீட்டில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், அங்கன்வாடி மையம் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.
துறை அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தபோது, அந்த குடியிருப்பை, தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருப்பது தெரியவந்தது. இது குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகள், வருவாய் துறையிடம் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய சப் கலெக்டர் குமரன், ஆக்கிரமிப்பை அகற்றி, குடியிருப்பை மீட்டு, சம்மந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஆக்கிரமிப்பு வீட்டை காலி செய்து, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரியிடம் சாவியை ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

