ADDED : டிச 09, 2025 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சின்னையாபுரம் மேற்கு , கிழக்கு பகுதிகளில் உட்புற சிமென்ட் சாலைகள் அமைக்கும் பணியினை அமைச்சர் லட்சுமி நாராயணன் பூஜை செய்து துவக்கி வைத்தார்.
ராஜ் பவன் தொகுதிக்கு உட்பட்ட சின்னையாபுரம் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் புதுச்சேரி நகராட்சி மூலம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் உட்புற சாலைகளை சிமென்ட் சாலைகளாக மேம்படுத்தும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
இப்பணியினை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கி, பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இதில், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனி ராஜா, என்.ஆர்.காங்., நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

