
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: செட்டிப்பட்டு ஏரி நீர்வரத்து வாய்க்கால் கரையில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் சார்பில் மண்ணாடிபட்டு தொகுதி செட்டிப்பட்டு ஏரிக்கு செல்லும் நீர்வரத்து வாய்க்கால் கரையில் ரூ. 30.32 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணியை நேற்று அமைச்சர் நமச்சிவாயம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்து, நீர்வரத்து வாய்க்காலை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், பா.ஜ., பிரமுகர் முத்தழகன், கொம்யூன் ஆணையர் எழில்ராஜன், கலியபெருமாள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.