
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உழவர்கரை தொகுதியில் ரூ.89 லட்சம் மதிப்பீட்டில் சாலைகள் மேம்படுத்தும் பணியினை சிவசங்கர் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
உழவர்கரை தொகுதி மோதிலால் நகர் விரிவாக்கம், ஜான்குமார் நகர், ஏ.கே.டி., நகர், சீனிவாசா நகர், ராஜாவிஜயம் அவென்யூ, டாக்டர்ஸ் அவென்யூ, வெல்கம் அவென்யூ ஆகிய பகுதிகளில் உழவர்கரை நகராட்சி மூலம்எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 89 லட்சத்து 32 ஆயிரத்து 800 மதிப்பில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் துவங்க விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, தொகுதி எம்.எல்.ஏ., சிவசங்கர் தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். நகராட்சி இளநிலை பொறியாளர் சிவக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.