/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணவெளி தொகுதியில் சாலை பணி துவக்கம்
/
மணவெளி தொகுதியில் சாலை பணி துவக்கம்
ADDED : மார் 08, 2024 11:22 PM

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் ரூ. 41 லட்சம் மதிப்பில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
மணவெளி தொகுதி, தானாம்பாளையம் சடையப்பர் கோவில் தெரு, அய்யனார் கோவில் தெரு, மணவெளி ராயல் நகர் ஆகிய பகுதிகளில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.41.00 லட்சம் மதிப்பில் சாலை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டது. இப்பணிகளை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
வெங்கடேசன் எம்.எல்.ஏ., அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவிப் பொறியாளர் நாகராஜ், இளநிலைப் பொறியாளர்கள் அகிலன், சுரேஷ், ஞானசேகர், கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர் குமரன், செழியன், கலைவாணன், தங்கதுரை, சசி, பன்னீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

