ADDED : நவ 16, 2026 10:27 PM

அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: நோணாங்குப்பத்தில் கூரை வீடு எரிந்து, வீட்டு பொருட்கள், ரொக்கப்பணம் தீயில் சேதமாகியது.
அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் காமன் கோவில் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி, இவரது கூரை வீடு இன்று (நவ.,16) மதியம் 2:30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்த புதுச்சேரி தீயணைப்பு
நிலைய அதிகாரி சுகுமார் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில், வீட்டில் இருந்த டி.வி., கட்டில், கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு பொருட்கள் மற்றும் பீரோவில் வீடு கட்டுவதற்கு வைத்திருந்த ரொக்க பணம் தீயில் கருகி சாம்பலாயின.
தீவிபத்து குறித்து போலீசார் விசாரித்துவருகின்னர்.
