/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆர்.ஆர்., திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
ஆர்.ஆர்., திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 04, 2024 03:30 AM

புதுச்சேரி: பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள இளநிலை பொறியாளர் பதவிக்கான ஆர்.ஆர்., திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொதுப்பணித்துறை பணிமேற்பார்வையாளர் மற்றும் பணி உதவியாளர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன், நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பச்சையப்பன், அன்பழகன் தலைமை தாங்கினர். ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், பிரேம்தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள இளநிலைப் பொறியாளர் பதவிக்கான ஆர்.ஆர்., திருத்தம் செய்துள்ளது. புதுச்சேரி அரசு ஒதுக்கீடு வழங்காமல் 85 சதவீதம் நேரடி நியமனத்திற்கும், 10 சதவீதம் பதவி உயர்வு மூலம் வரைவாளர்களுக்கும் மீதி 5 சதவீதம் குறைந்த தகுதி உள்ள வரைவாளர்களுக்கு போட்டி தேர்வு மூலம் தேர்வுதெடுக்கப்படும் வகையில் புதிய ஆர்.ஆர்., திருத்தப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.