/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் நாய் காப்பகம் அமைக்க ரூ.20 லட்சம்: நாஜிம் எம்.எல்.ஏ., கடிதம்

ADDED : நவ 11, 2025 06:36 AM
காரைக்கால்: காரைக்கால் தெற்கு தொகுதியில் நாய் காப்பகம் அமைக்க ரூ.20 லட்சம் நிதி ஒதுக்க தயாராக உள்ளதாக நாஜிம் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் காரைக்கால் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
காரைக்காலில் தெற்கு தொகுதியில் நாய்கள் தொல்லை அதிகம் காணப்படுகிறது, இதனால் பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு சாலை விபத்துகள் ஏற்படுகிறது. எனவேகாரைக்கால் தெற்கு தொகுதியில் நாய்கள் அதிகம் காணப்படும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அன்மையில் தெருநாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தெருநாய்களை மனிதாபிமான மேலாண்மைக்காக தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் நாய்களுக்கு சரியான தங்குமிடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் நாய்கள் காப்பகம் அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்க தயாராக இருக்கிறேன்.
அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.