/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டு ஜன்னலை உடைத்து ரூ. 7 லட்சம் பணம் திருட்டு
/
வீட்டு ஜன்னலை உடைத்து ரூ. 7 லட்சம் பணம் திருட்டு
ADDED : ஜூலை 10, 2025 01:46 AM
புதுச்சேரி:  வீட்டு ஜன்னல் கதவை உடைத்து, பீரோவில் இருந்த, 7 லட்சம் பணத்தை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
லாஸ்பேட்டை, ஏர்போர்ட் சாலை, ஆழ்வார் வீதியை சேர்ந்தவர்  முகமதுஅலி, 71, பிரான்ஸ் குடியுரிமை பெற்றவர். இவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்து, லாஸ்பேட்டை பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்தினருடன் வெளியில் சென்று விட்டு, வீட்டுக்கு வந்தார். வீட்டு முன்பக்க ஜன்னல் கதவு  உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த ரொக்க பணம் 7 லட்சம் ரூபாய், காணாமல் போயிருந்தது. இதுபற்றி அவர் லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர். அந்த பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி., கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

