/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
9 பேரிடம் ரூ.7.67 லட்சம் 'அபேஸ்'
/
9 பேரிடம் ரூ.7.67 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜூலை 12, 2025 03:19 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் 9 பேர் ரூ.7.67 லட்சம் ஏமாந்துள்ளனர்.
முத்தியால்பேட்டையை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்வது குறித்து விளக்கம் அளித்தார். இதைநம்பி, பல்வேறு தவணைகளாக 3 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
முருங்கப்பாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, அவரது மொபைல் எண்ணிற்கு ஆப் ஒன்று வந்துள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரத்தை மர்மநபர்கள் எடுத்தனர்.
இதேபோல், முதலியார்பேட்டையை சேர்ந்த பெண் பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, 1 லட்சத்து 40 ஆயிரம், மற்றொரு பெண் 1 லட்சத்து 17 ஆயிரம், முத்தியால்பேட்டையை சேர்ந்த நபர் 94 ஆயிரத்து 220, சுல்தான்பேட்டையை சேர்ந்த பெண் 20 ஆயிரம், உப்பளத்தை சேர்ந்த நபர் 2 ஆயிரத்து 499, பிள்ளைச்சாவடியை சேர்ந்த பெண் 37 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்த பெண் 2 ஆயிரத்து 999 என 9 பேர் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் 7 லட்சத்து 67 ஆயிரத்து 718 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.