ADDED : செப் 09, 2025 06:26 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் பெண் உட்பட 3 பேர் மோசடி கும்பலிடம் ரூ.8.15 லட்சம் ஏமாந்துள்ளனர்.
சாரத்தை சேர்ந்த நபரை, டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் பகுதிநேர வேலையாக வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதை நம்பி, மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் பல்வேறு தவணையாக ரூ. 4 லட்சத்து 67 ஆயிரம் முதலீடு செய்துள்ளார்.
பின், அதன் மூலம் வந்த லாபப்பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இதேபோல், ஏம்பலத்தை சேர்ந்த பெண் பகுதிநேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து 3 லட்சத்து 20 ஆயிரத்து 900, வில்லியனுாரை சேர்ந்த நபர் 28 ஆயிரம் என 3 பேர் மோசடி கும்பலிடம் 8 லட்சத்து 15 ஆயிரத்து 900 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
