UPDATED : நவ 24, 2026 07:02 PM
ADDED : நவ 24, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: முத்தியால்பேட்டை சேர்ந்தவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.86 லட்சத்தை மர்ம நபர்கள் திருடியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முத்தியால்பேட்டை, விஸ்வநாதன் நகரை சேர்ந்தவர் கோபக்குமார்,57. இவரது வங்கி கணக்கில் இருந்து கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் மர்ம நபர்கள் பல்வேறு தவணைகளில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 488 ரூபாய் எடுத்துள்ளனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த கோபக்குமார், இணைய வழியாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து ஜீரோ எப்.ஐ.ஆர்., பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார், வழக்கை முத்தியால்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர்.
