/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம்
/
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம்
ADDED : செப் 08, 2025 02:43 AM

புதுச்சேரி:ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டை முன்னிட்டு புதுச்சேரி பா.ஜ., தலைமை அலுவகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பா.ஜ., மாநிலத் தலைவர் ராமலிங்கம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, எம்.எல்.ஏ.,க்கள்., சாய் சரவணன், தீப்பாய்ந்தான், செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் பாபு, மாநில பொதுச் செயலாளர்கள் மோகன் குமார், லட்சுமி நாராயணன், மாநிலத் துணைத் தலைவர்கள், மாநில செயலாளர்கள், அணி தலைவர்கள், பிரிவு தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அடுத்த மூன்று மாதம் சங்க பணிகள் குறித்து பகுதி வாரியாக ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம் நடத்துவது, வீடு வாரியாக சென்று பிரசங்கம் வழங்குவது, பகுதி வாரியாக ஆன்மிக மாநாடு நடத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.