/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுத்தேர்வு நாட்களில் சகஸ்ர நாம அர்ச்சனை
/
பொதுத்தேர்வு நாட்களில் சகஸ்ர நாம அர்ச்சனை
ADDED : பிப் 12, 2025 04:06 AM
புதுச்சேரி : பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, பொதுதேர்வு நாட்களில் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ர நாம அர்ச்சனை நடக்கிறது.
முத்தியால்பேட்டை ராமக்கிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது. அதன்படி, இந்தாண்டு பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் காலை 10:30 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கிறது.சகஸ்ரநாம அர்ச்சனையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, சகஸ்ரநாம புத்தகம், ஹயக்ரீவ என எழுதும் புத்தகம், வெள்ளி டாலர், ரக்ஷ்ைஷ, பேனா, தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை வேத ஆகம சம்ரக் ஷண லட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் செய்து வருகிறது.

