/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்றுடன் நிறைவடைகிறது சேல்ஸ் எக்ஸ்போ 2024
/
இன்றுடன் நிறைவடைகிறது சேல்ஸ் எக்ஸ்போ 2024
ADDED : மார் 18, 2024 03:13 AM
புதுச்சேரி : ஐடியல் அட்ஸ் மற்றும் ஈவன்ட்ஸ் நிறுவனம் சார்பில் நடந்து வரும் சேல்ஸ் எக்ஸ்போ 2024 இன்றுடன் நிறைவடைகிறது.
புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் ஐடியல் அட்ஸ் மற்றும் ஈவன்ட்ஸ் நிறுவனம் சார்பில் மார்ச் வருடாந்திரா சேல்ஸ் எக்ஸ்போ 2024 கடந்த 15ம் துவங்கிய எக்ஸ்போ இன்று (18ம் தேதி ) நிறைவடைகிறது.
எக்ஸ்போ குறித்து உரிமையாளர் கூறியதாவது:விழாக்கால சிறப்பு சலுகையாக 50 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது.
இதில் ரெக்கீளினர் செட், மாடர்ன் சோபா, இம்போர்டட் சோபா, மசாஜ் சேர், டைனிங் செட், பெட்ரூம் செட், அவட்டோர் பர்னீச்சர் உள்ளிட்ட பர்னீச்சர் வகைகள், வீட்டு உபயோக பொருட்கள், டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின், மிக்சி, பெண்களுக்கான அழகிய பேக்குகள் சிறப்பு தள்ளுபடி உள்ளது.
மேலும் மளிகை பொருட்கள், ஜவுளி ரகங்கள், கிச்சன் அப்ளையன்ஸ் அனைத்தும் தவனை முறையில் வாங்க லோன் வசதியும் செய்து தரப்படுகிறது.
எக்ஸ்போவில் சத்யா நிறுவனம் வழங்கும் ஸ்மார்ட் போன் வாங்கினால பட்டர்பிளை கிச்சன் செட் இலவசம், ரூ. 1 செலுத்தி ஏசி இ.எம்.ஐ.,யில் ஏசி வழங்கப்படுகிறது. எந்த பிராண்ட் 5 ஸ்டார் ஏசி வாங்கினால் நான்கு சேர்கள், 3 ஸ்டார் ஏசி வாங்கினால் இரண்டு சேர்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.
எக்ஸ்போ தொடர்பான விளம்பரத்தை கொண்டு வந்து கொடுத்து ரூ. 250 செலுத்தினால், ரூ. 500 மதிப்புள்ள நாகா மற்றும் எலைட் மளிகை பொருட்களை பெற்று செல்லலாம்.
எக்ஸ்போ இன்றுடன் முடிவதால் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கிச் செல்லலாம். அனுமதி இலவசம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

