/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அணைக்கட்டில் குளித்த பள்ளி மாணவர் மாயம்
/
அணைக்கட்டில் குளித்த பள்ளி மாணவர் மாயம்
ADDED : ஜன 16, 2025 03:38 AM

திருவெண்ணெய்நல்லூர், : எல்லிஸ் அணைக்கட்டில் குளித்த போது தண்ணீரில் மூழ்கிய வாலிபரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அடுத்த கப்பூர் காலனியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் குரு பிரசாத், 15; இவர் கீழ்ப்பெரும்பாக்கத்திலுள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நண்பர்களுடன் நேற்று மாலை 4:30 மணி அளவில் ஏனாதிமங்கலம் எல்லீஸ் அணைக்கட்டில் குளித்தார்.
எதிர்பாராதவிதமாக மாணவர் தண்ணீரில் மூழ்கி மாயமானார். தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான 20க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இரவு 7:40 மணி வரை தேடியும் குருபிரசாத் கிடைக்கவில்லை.

