விவேகானந்த சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி
விவேகானந்த சி.பி.எஸ்.இ., பள்ளியில் அறிவியல் கண்காட்சி
ADDED : நவ 05, 2026 05:30 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி கோபாலன்கடை விவேகானந்தா சி.பி.எஸ்.இ., பள்ளியில், கணிதம் மற்றும் அறிவியல் கண்காட்சி இன்று (நவ.,5) நடந்தது. பள்ளி முதன்மை முதல்வர் பத்மா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர்கள் கீதா,உஷாதேவி மேற்பார்வையில் கண்காட்சி நடந்தது. இதில், மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல அரிய படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர்.
கண்காட்சியில் கணிணி அரங்கம், அறிவியல் அரங்கம், வரலாற்று அரங்கம், ஓவிய அரங்கம், விளையாட்டு அரங்கம், உணவு அரங்கம் என பல அரங்குகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
