அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை
அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை
UPDATED : நவ 06, 2026 07:12 PM
ADDED : நவ 05, 2026 06:06 PM

புதுச்சேரி: தீபாவளி பண்டிகையையொட்டி, புதுச்சேரி அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது.
பெரம்பலுாரை தலைமையிடமாக கொண்டு அஸ்வின் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் நிறுவனம் கடந்த 23 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மறுமுறை பயன்படுத்துவதில்லை, ரசாயன பொருட்களை கலப்பதில்லை. சுத்தமான சுகாதாரமான ஹைஜெனிக்கான இடங்களில் பாரம்பரிய முறைப்படி, மினரல் வாட்டரில் தான் பட்சனங்களை தயாரிக்கப்படுகிறது.
லட்டு, பூந்தி, மைசூர்பாக், அதிரசம், பக்வாலா உள்ளிட்ட இனிப்பு வகைகளும், முறுக்கு, மிச்சர், பக்கோடா போன்ற கார வகைகளும், இனிய தனி சுவையில் தயாரித்து, லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களிலும், தனக்கென தனி இடம் பிடித்துள்ளது.
அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் பேக்கரி பெரம்பலுார் , திருச்சி, சேலம், சென்னை, திண்டுக்கல், ஆத்துார், புதுச்சேரி, ஒசூர், துறையூர், லால்குடி, அரியலுார் , உளுந்துார்பேட்டை, திண்டிவனம், விழுப்புரம், முசிறி, கரூர், தஞ்சாவூர், கும்பகோணம் உட்பட 50 கிளைகளுடன் இயங்கி வருகிறது.
அனைத்து கிளைகளிலும் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் தீபாவளி கிப்ட் பேக் வகைகளும், மிக்ஸடு ஸ்வீட் வகைகளும், பக்கெட், ஹேம்பர், கிளாசிக் பேப்பர் வடிவிலான கிப்ட் பேக்குகள் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி இனிப்பு, காரவகைகள் கொண்ட பக்கெட் ரூ.499-க்கும், பேமிலி பக்கெட் ரூ.799-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து வாடிக்கையாளர்களும் 7639005555 ஆகிய எண்ணில் தொடர்பு கொண்டு தீபாவளி ஆர்டர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
அஸ்வின்ஸ் நிறுவனர் கணேசன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
