நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஸ்கூட்டர் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
உருளையன்பேட்டை சேர்ந்தவர் தசரதன், 32; சேல்ஸ்மேன். இவர் தனது நண்பரின் ஸ்கூட்டரை பயன்படுத்தி வந்தார்.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி மதியம் 1:30 மணியளவில் தென்னஞ்சாலை ரோட்டில் உள்ள மளிகைகடை எதிரே ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்குவதற்காக, கடையின் உள்ளே சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. எங்குதேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து பைக் திருடிய, மர்ம நபரை தேடி வருகின்றனர்.

