UPDATED : நவ 07, 2026 03:18 PM
ADDED : நவ 07, 2026 03:16 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பாரதி பூங்காவில் நிறுத்தியிருந்து ஸ்கூட்டர் திருடு போனது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் மன்சூர் அலி,45. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி வாசலில் மதபோதகராக உள்ளார். கடந்த மாதம் 20ம் தேதி புதுச்சேரி பாரதி பூங்கா, பெருமாள் கோவில் அருகில் தனது ஸ்கூட்டரை (டிஎன்.16.டி.6984) நிறுத்திவிட்டு நடைபயிற்சிக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, ஸ்கூட்டரை காணவில்லை.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பெரிய கடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
