/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடல் சாகச பெண் கமாண்டர்கள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்
/
கடல் சாகச பெண் கமாண்டர்கள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்
கடல் சாகச பெண் கமாண்டர்கள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்
கடல் சாகச பெண் கமாண்டர்கள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்
ADDED : ஆக 12, 2025 02:55 AM

புதுச்சேரி: உலகளாவிய கடல் சாகச சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிய கடற்படை பெண் கமாண்டர்கள் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்திய கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் கமாண்டர் கடலுார் ரூபா மற்றும் கேரள மாநிலம் கோழிக்கோடு லெப்டினன்ட் கமாண்டர் தில்னா ஆகிய இருவரும் கடந்த 2024 அக்.2ம் தேதி முதல் 2025 மே 25ம் தேதிவரை 25 ஆயிரத்து 600 கடல் மைல் (45 ஆயிரத்து 500 கி.மீ.,) நவிகா சாகர் பரிக்ரமா-II என்கிற உலகளாவிய கடல் சாகச சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பியுள்ளனர்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க கடல்சார் பயணத்தை வெற்றிகரமாக முடித்த இருவரும் நேற்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
அவர்களுக்கு முதல்வர் ரங்காமி சால்வை அணிவித்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
சபாநாயகர் செல்வம், கேப்டன் பிரசாந்த் மேனன் உடன் இருந்தார்.