/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு: என்ஆர் காங்., -16, பாஜ - 10, அதிமுக - 2, லஜக - 2
/
புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு: என்ஆர் காங்., -16, பாஜ - 10, அதிமுக - 2, லஜக - 2
புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு: என்ஆர் காங்., -16, பாஜ - 10, அதிமுக - 2, லஜக - 2
புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு: என்ஆர் காங்., -16, பாஜ - 10, அதிமுக - 2, லஜக - 2
UPDATED : மார் 20, 2026 10:40 PM
ADDED : மார் 20, 2026 04:38 PM

-நமது நிருபர்-
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் - பாஜ இடையே தொகுதி பங்கீடு முடிவாகி உள்ளது. என்ஆர் காங்கிரஸ் 16, பாஜ 10, அதிமுக 2 லஜக 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 9ம் தேதி நடக்கவுள்ளது. கடந்த 2021 தேர்தலை போன்றே, என்.ஆர்.காங்., - பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி கட்சிகள் இணைந்து, இந்த தேர்தலையும் சந்திப்பது என முடிவானது. இதை, கடந்த மாதம் காரைக்காலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, முதல்வர் ரங்கசாமி உறுதி செய்தார்.அப்போது, மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்., 16, மீதமுள்ள 14 தொகுதிகளை பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கிட்டுக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
கடும் எதிர்ப்பு
இந்நிலையில், என்.ஆர்.காங்., ஆட்சியை கடுமையாக விமர்சித்த, தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் துவங்கிய லட்சிய ஜனநாயக கட்சியை, தே.ஜ., கூட்டணியில் சேர்க்க பா.ஜ., முடிவு செய்தது. அதற்கு முதல்வர் ரங்கசாமி எதிர்ப்பு தெரிவித்தார். ரங்கசாமியை சமாதானம் செய்ய பாஜ தரப்பில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கிடையே, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேச, டில்லியில் இருந்து மன்சுக் மாண்டவியா மற்றும் புதுச்சேரி பா.ஜ., நிர்வாகிகள் நேற்று தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்தனர். ஆனால், முதல்வர் ரங்கசாமி திருச்செந்தூர் சென்றார். இதற்கிடையில், திருச்செந்துார் சென்ற ரங்கசாமியை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதையடுத்து, தன் கட்சியைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், மல்லாடி கிருஷ்ணாராவ், ஆறுமுகம், ஜெயபால் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசிய ரங்கசாமி, 'கூட்டணி தொடர்பாக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியாவிடம் மீண்டும் பேச்சு நடத்துங்கள்' என உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்கள், மன்சுக் மாண்டவியாவிடம் பேச்சு நடத்தினர்.
இந்நிலையில், இன்று புதுச்சேரியில் பாஜ மேலிட பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியாவை முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசினார். இதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தொகுதி பங்கீடு இறுதியானது. லஜகவுக்கு 2 தொகுதிகளை ஒதுக்க ரங்கசாமி முன் வந்துள்ளார். என் ஆர் காங்கிரஸ் -16, பாஜ -10, அதிமுக -2, லஜக 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.
இதன் பிறகு முதல்வர் ரங்கசாமி கூறுகையில் தேஜ கூட்டணி எப்போதும் உண்டு. புதுச்சேரி வளர்ச்சிக்கு பிரதமர், உள்துறை அமைச்சர் நிறைய திட்டங்கள் அறிவிப்பார்கள். அதனை நிறைவேற்ற கூட்டணி தேவை.கூட்டணி மூலம் புதுச்சேரி வளரும் என்பதை அறிவார்கள். தேஜ கூட்டணி தொடரும்.தேர்தலை சந்திக்கும். வெற்றி பெறும்.என்ஆர் காங்கிரஸ் - 16 ; பாஜ., - 10, அதிமுக- 2, லஜக- 2 தொகுதிகளில் போட்டியிடும் என்றார்.
மன்சுக் மாண்டவியா கூறுகையில், ஒவ்வொரு கட்சிக்கும் என ஒரு திட்டம் இருக்கும். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி, அமித்ஷா வருவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்புமனு
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் தொகுதிகளில் அவர் போட்டியிடுகிறார்.

