/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் செயலர், இயக்குனர் ஆய்வு
/
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் செயலர், இயக்குனர் ஆய்வு
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் செயலர், இயக்குனர் ஆய்வு
ஆதிதிராவிடர் நல விடுதிகளில் செயலர், இயக்குனர் ஆய்வு
ADDED : பிப் 05, 2025 06:14 AM

புதுச்சேரி: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில் அரசு செயலர் மற்றும் இயக்குனர் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பல்வேறு பகுதிகளில், 14 மாணவ - மாணவியர் விடுதிகள் இயங்கி வருகின்றன.
இந்த விடுதிகளில் துறை செயலர் முத்தம்மா, இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் நேற்று 'திடீர்' ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இரவில் இட்லி, சப்பாத்தி உள்ளிட்ட உணவுகளை மாணவர்களுக்கு வழங்கவும், அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தங்கும் அறைகளை தயார் செய்யவும் விடுதி காப்பாளர்களுக்கு உத்தரவிட்டனர். ஆய்வில் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.