/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்சோ வழக்கில் செக்யூரிட்டி கைது
/
போக்சோ வழக்கில் செக்யூரிட்டி கைது
ADDED : ஆக 25, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன செக்யூரிட்டியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி, தன்வந்தரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் மகேஷ்வரன், 37; தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டை சேர்ந்த இரண்டரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், தன்வந்தரி போலீசார் மகேஷ்வரன் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து நேற்று கைது செய்தனர். பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.