/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஏனாமில் சீரா மீன் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை
/
ஏனாமில் சீரா மீன் ரூ.30 லட்சத்திற்கு விற்பனை
ADDED : அக் 18, 2025 06:05 AM
புதுச்சேரி: சீரா மீன் கோதாவரி நதியின் உவர் நீரில் காணப்படும் அரிய வகை சிறிய மீன். இறாலை போன்ற தோற்றம் கொண்டது.
இந்த மீன் இந்தியாவில் ஏனாம் பகுதியின் சுவையான உணவாகும். கோதாவரி நதியும், கடலும் கலக்கும் இடத்தில் உவர் நீரில் இந்த மீன் அதிக அளவில் காணப்படுகிறது.
தென்கிழக்கு பருவமழையின் போது இந்த மீன் அதிகளவில் கிடைக்கும். அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் இந்த மீன் லிட்டர் கணக்கில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, நேற்று ஒரு லிட்டர் ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. நேற்று ஒரு நாள் மட்டும் 30 லட்சம் ரூபாய்க்கு மேல் சீரா மீன்கள் விற்பனையானது.
இதை ஏனாம் மற்றும் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ள கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென் றனர்.