UPDATED : நவ 01, 2026 11:59 PM
ADDED : நவ 01, 2026 11:59 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி பெத்துசெட்டிப்பேட் சிவசுப்ரமணியர் சுவாமி கோவிலில் புதிய தேர் கரிக்கோள் விழா நடந்தது.
லாஸ்பேட்டை தொகுதிக்குட்பட்ட பெத்துச்செட்டிப்பேட் பகுதியில் அமைந்துள்ள சித்தி விநாயகர், சிவசுப்ரமணியர் சுவாமி தேவஸ்தானத்தின் புதிய தேர் கரிக்கோள் விழா நடந்தது.
விழாவில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சிவக்கொழுந்து முன்னிலையில் திருத்தேருக்கு கரிக்கோள பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து திருத்தேரில் சுப்ரமணிய சுவாமி வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
