ADDED : செப் 23, 2024 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பாக்கமுடையன்பேட் கூட்டுறவு கிரிடிட் சொசைட்டிக்கு புதிய இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி, பாக்கமுடையன்பேட் பகுதியில் அமைந்துள்ள, புதுச்சேரி அரசு குழு பி மற்றும் சி பணியாளர்கள் கூட்டுறவு கிரிடிட் சொசைட்டி லிமிடெட்டிற்கு நிர்வாக குழு இயக்குநர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.
இதில் அன்னபூரணி, அன்பரசன், புவியரசு, செல்வம், ராஜேந்திரன், பழனிவேலு, முருகதாஸ், ரவி, வினாயகமூர்த்தி ஆகிய 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வரும் 1ம் தேதி முதல் 31.07. 2027ம் தேதி வரை இயக்குனர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகவலை கூட்டுறவு மற்றும் தேர்தல் அதிகாரி குணசேகரன் தெரிவித்துள்ளார்.