தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சேலியமேடு அரசு உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி 

 சேலியமேடு அரசு உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி 

 சேலியமேடு அரசு உயர்நிலை பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி 


ADDED : மார் 12, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 04:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.

பள்ளி கல்வி துறை சமக்ர சிக் ஷா வழிகாட்டுதலின் படி, ராணி லட்சுமி பாய் ஆத்ம ரக் ஷ பிரஷிக்சம் திட்டத்தின் கீழ், மாணவிகளுக்கு தன்னம்பிக்கை, சுய பாதுகாப்பு மற்றும் உடல் வலிமையை அதிகரிக்கும் நோக்கில், 6, 7 மற்றும் 8 ம் வகுப்பு மாணவிகளுக்கு, தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.

இதில், கராத்தே, கூடோ, ஸ்குவாஸ் தற்காப்பு கலையில் உள்ள ரவுண்ட் ஆஸ், (காலால் உதைத்தல்) குத்துதல், எதிரியின் தாக்குதலை தடுத்து துாக்கி எறிதல், லாக் டெக்னிக், கையில் இருக்கும் பொருட்களை கொண்டு தற்காத்து கொள்ளுதல் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன் நிறைவு விழா நடந்தது. ஆசிரியர் சரவணன் வரவேற்றார். தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை தாங்கி, பயிற்சி முடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தற்காப்பு கலை பயிற்சியாளர் பாலச்சந்தர் முன்னிலையில், பயிற்சி பெற்ற மாணவிகள் தற்காப்பு பயிற்சி குறித்து செயல் விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செல்வக்குமரன், வெரோனஸ் விஜயலட்சுமி, புஷ்பலிங்கம், செந்தில்முருகன், பெருமாள், சித்திரைச்செல்வி, செந்தில்குமாரன், மதிவாணன் ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை சுந்தரி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us