UPDATED : அக் 08, 2026 10:31 PM
ADDED : அக் 08, 2026 08:45 PM
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் உலா வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுடன் இளைஞர்கள் செல்வி எடுத்து கொண்டனர்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய 'ஏ' கிரிக்கெட் அணி, புதுச்சேரியில் நடைபெற்று வரும் மல்டி டே டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னணி வீரர்களான சாம் கோன்ஸ்டாஸ், மார்கஸ் ஹாரிஸ், நாதன் மெக்ஸ்வீனி, வில் சதர்லேண்ட் உள்ளிட்ட வீரர்கள் புதுச்சேரி கடற்கரை சாலைக்கு நேற்று மதியம் வருகை தந்தனர்.
மதியம் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், வெப்பத்தை தணிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது சட்டைகளைக் கழற்றி சாதாரணமாகக் கடற்கரை சாலையில் உலா வந்தவர்கள், அங்குள்ள இயற்கை அழகை ரசித்தபடி, சக வீரர்களுடன் ஜாலியாக உரையாடி நடந்து சென்றனர். அவர்களிடம் புதுச்சேரி இளைஞர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் செல்பிக்கள் எடுத்துக்கொண்டு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
