தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம்

உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம்

உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம்


UPDATED : அக் 08, 2026 10:31 PM

ADDED : அக் 08, 2026 08:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 10:31 PM ADDED : அக் 08, 2026 08:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் 100 மாணவர்கள் பங்கேற்ற உலக மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

உலக மனநல தினத்தை முன்னிட்டு, விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி மற்றும் மறுவாழ்வு மற்றும் நடத்தை அறிவியல் பள்ளியின் மருத்துவ உளவியல் துறை சார்பில், புதுச்சேரி கடற்கரை சாலையில் மனநல தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

100 கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் லோக் நிவாஸில் துவங்கி கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் முடிந்தது. உண்மையான குரல்கள், உண்மையான மாற்றம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், மனநல ஆதரவு தேவைப்படுவோர் தனியாக இல்லை என்பதை உணர்த்தும் வகையில், இலவச மனநல உதவி எண்ணான 14416-ஐத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உறுதிமொழி' ஏற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us