/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கழிவு மேலாண்மை கருத்தரங்கம்
/
மின் கழிவு மேலாண்மை கருத்தரங்கம்
ADDED : மார் 20, 2024 11:46 PM

புதுச்சேரி, : புதுச்சேரியில் மின் கழிவுகளை மேலாண்மை செய்வது குறித்த கருத்தரங்கம் நடந்தது.
உலக அளவில் மின்னணுக் கழிவுகளை அதிகளவு உற்பத்திசெய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்தப் பின்னணியில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மின்னணுக் கழிவு மேலாண்மைக்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் மின் கழிவுகள் அதிகரித்துள்ள சூழ்நிலையில் அதனுடையமேலாண்மை குறித்த, கருத்தரங்கம், புதுச்சேரியில் நிலையான மின் கழிவு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல்என்ற தலைப்பில் ஓட்டல் சன்வேயில் நடந்தது. சுற்றுச்சூழல் பொறியாளர் காளமேகம் வரவேற்றார்.
புதுச்சேரி மாசுக்கட்டுபாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் நோக்கவுரையாற்றினார். அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் துறை இயக்குனர் யாசம் லட்சுமி நாராயணா ரெட்டி சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து நடந்த தொழில்நுட்ப சிறப்பு அமர்வில், புதுச்சேரி ரீசிட்டி நெட் ஒர்க் நிறுவன உதவி மேலாளர் யோகேஷ் கலைமணி, புதுச்சேரி மாசுக்கட்டுபாட்டு குழும உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் தேவநாதன், சுற்றுச்சூழல் பொறியியல் துறை உதவி பேராசிரியர் சுடலை ஆகியோர் கலந்துரையாடினர்.
புதுச்சேரியில் மின் கழிவுகள், அதனை அகற்றுவதில் உள்ள இடர்பாடுகள், மறுசுழற்சி குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த சுற்றுச்சூழல் வல்லுநர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை முன் வைத்தனர்.
ஏற்பாடுகளை புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் துறை செய்திருந்தது.

