/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அறுவை சிகிச்சை குறித்து ஜிப்மரில் கருத்தரங்கம்
/
அறுவை சிகிச்சை குறித்து ஜிப்மரில் கருத்தரங்கம்
ADDED : ஏப் 09, 2025 03:31 AM
புதுச்சேரி : ஜிப்மர் மருத்துவமனையில் கல்லீரல், கணையம், பித்தப்பை நோய்களுக்கான அறுவை சிகிச்சை குறித்த 3 நாள் மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.
இந்திய குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம், ஜிப்மர் இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை துறை சார்பில் நடந்த கருத்தரங்கை மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் துவக்கி வைத்தார்.
ஜிப்மர் இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் பிஜூ பொட்டக்காட், இந்திய குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் செயலாளர் ரோஷன் ெஷட்டி சிறப்புரை ஆற்றினர்.
ஜிப்மர் இயக்குனர் வீர்சிங் நேகி வாழ்த்தி பேசினார்.
கருத்தரங்கில், 50க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் கலந்து கொண்டு, பேப்ரா- எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சையில் அதிநவீன நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட திறன்கள் குறித்து விளக்கி பேசினர்.
மேலும், மேம்பட்ட குறைந்தபட்ச ஊடுருவும் அறுவை சிகிச்சை நுட்பங்கள், ஆழமான நுண்ணறிவு, சிக்கலான மறுகட்டமைப்பு அறுவை சிகிச்சை திறன்கள், லேப்ரோஸ்கோபிக் கருவிகள் மூலம் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளில் சமீபத்திய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் ஆதார அடிப்படையிலான அணுகுமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

