UPDATED : அக் 02, 2026 01:49 AM
ADDED : அக் 02, 2026 01:46 AM

புதுச்சேரி: புதுச்சேரி ராஜிவ் – இந்திராகாந்தி சிக்னல் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் போலீஸ் தலைமையகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் தலைமை தாங்கினார். போக்குவரத்து சீனியர் எஸ்.பி., திவ்யா, எஸ்.பி., ரச்சனா சிங், பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, சுகாதாரத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுச்சேரி ராஜிவ் சதுக்கம் சிக்னலில் இருந்து இந்திராகாந்தி சிக்னல் வரை மேம்பாலம் கட்டுமான பணியின் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு எவ்வாறு போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டும். புதுச்சேரி - கடலுார் சாலையில் ரயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், இந்திராகாந்தி சிக்னல் பகுதியில் மேம்பாலம் பணிகள் தொடங்கினால் நகர பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை எவ்வாறு போலீசார் கையாண்டு அதற்கு தகுந்த போல் போக்குவரத்து மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் டி.ஐ.ஜி. சத்தியம் சுந்தரம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
