/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தொடர் வெடிகுண்டு மிரட்டல் குற்றவாளி விரைவில் கைது; அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

ADDED : ஏப் 27, 2025 04:34 AM
காரைக்கால் : தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என, அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.
காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:
தனது அமைச்சரவை சகாக்களுடன் நடுரோட்டில் அமர்ந்து சாதனை படைத்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி அரசின் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். எங்கள் கூட்டணி அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
தொடர் வெடிகுண்டு மிரட்டல் குறித்து டி.ஜி.பி., தலைமையில் ஒட்டுமொத்த போலீஸ் துறையும் விசாரித்து வருகிறது. விரைவில் குற்றவாளி கைது செய்யப்படுவர்.
மூன்று நம்பர் லாட்டரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போலீஸ் துறையின் அனைத்து பிரிவுகளுக்கும் கூடுதல் போலீசார் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.