/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆச்சார்யா பள்ளியில் 'சம்பாலா' கூட்டு தியானம்
/
ஆச்சார்யா பள்ளியில் 'சம்பாலா' கூட்டு தியானம்
ADDED : டிச 22, 2024 07:18 AM

புதுச்சேரி : வில்லியனுார் ஆச்சார்யா கல்வி நிறுவனம் சார்பில், கூட்டு தியானம் ஆச்சார்யா பள்ளி வளாகத்தில் நடந்தது.
புதுச்சேரி, வில்லியனுாரில் இயங்கி வரும் உலகத்தரம் வாய்ந்த ஆச்சார்யா கல்வி நிறுவனம் சார்பில் 13ம் ஆண்டு மகா சம்பாலா 'கூட்டு தியானம்' நடந்தது. இது உலக மக்களின் ஒற்றுமை, அமைதி, செழிப்பு போன்ற மக்களின் நலனுக்காக நடத்தப்படும் ஒரு மகா கூட்டு தியானம் ஆகும்.
இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, பிரபஞ்சத்தின் வாழ்த்தினைப் பெற்று வாழ்வில் சிறப்பாகவும், செம்மையாகவும் வாழ கூட்டு பிரார்த்தனை செய்தனர்.
இந்த தியான பயிற்சி, ஆச்சார்யா கல்விக் குழும நிறுவனர் அரவிந்தன் தலைமையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு, பிரசாதம் வழங்கப்பட்டன.
இதில் பங்கேற்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தெய்வீக ஆற்றலையும், பிரபஞ்சத்தின் வாழ்த்துகளையும் பெற்றதாகக் கூறித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.