sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 மொரட்டாண்டியில் மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை 8 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி : முன்பதிவு அவசியம்

/

 மொரட்டாண்டியில் மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை 8 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி : முன்பதிவு அவசியம்

 மொரட்டாண்டியில் மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை 8 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி : முன்பதிவு அவசியம்

 மொரட்டாண்டியில் மார்ச் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை 8 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி : முன்பதிவு அவசியம்


ADDED : பிப் 06, 2026 08:30 AM

Google News

ADDED : பிப் 06, 2026 08:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு மகா யாகம் மற்றும் மகர கும்ப தீப தரிசனம் நடக்கிறது.

கும்ப ராசியில் வீற்றிருக்கும் சனி பகவான் வரும் மார்ச் 6ம் தேதி காலை 8:26 மணிக்கு மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இச்சனிப் பெயர்ச்சி தோஷத்தில் இருந்து உலக மக்களை காத்திட வேண்டி, புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலை மொரட்டாண்டியில் அமைந்துள்ள சனீஸ்வரர் கோவிலில் முதல் முறையாக, இடைவிடாமல் சனி பகவானுக்கு நல்லெண்ணைய் அபிஷேகம் செய்து, நல்லெண்ணைய் கிணற்றில் சாமி முகம் மற்றும் தங்கள் முகம் பார்த்து தோஷம் நீக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவிலில் அமைந்துள்ள 27 அடி உயர விஸ்வரூப பஞ்சலோக பக்தானுக்கரக மகா சனீஸ்வரர் எதிரில் 80 அடி உயரத்தில் உள்ள மகர வாயில் கும்பத்தில், 8 ஆயிரம் லிட்டர் எண்ணெய் ஊற்றி, 800 கிலோ எள்ளை, 800 மீட்டர் காடா துணியில் கட்டி, 80 கிலோ கற்பூரம் கொண்டு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இந்த பூஜையில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். பங்கேற்க விரும்புவோர் ஒரு லிட்டர் நல்லெண்ணெய், ஒரு கிலோ எள், ஒரு மீட்டர் காடா துணி, ஒரு கிலோ கற்பூரம், பூஜை பொருட்கள் மற்றும் தட்சணை என, ரூ.3,000 கோவிலில் செலுத்தி தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், விபரம் வேண்டுவோர் சிதம்பர கீதாராம குருக்களை 93454 51655 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us