/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
சங்கர்ஸ் வித்யாலயா பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 18, 2025 02:37 AM

வில்லியனுார்: சங்கர்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
வில்லியனுார் சங்கர்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி சார்பில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 90 மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளியில் மாணவி ஸ்ரீலயா 492 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார்.
மாணவர் அஷ்வின் 487 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்தையும், மாணவிகள் திவ்யதர்ஷினி, ஹேமலட்சுமி மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் 483 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும், மாணவி ஜோஷினி 482 மதிப்பெண் பெற்று நான்காம் இடத்தையும், மாணவி ஹாசினி 480 மதிப்பெண் பெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்தனர்.
பள்ளியில் 450க்கு மேல் 31 மாணவர்களும், 400க்கு மேல் 28 மாணவர்களும் மதிப்பெண் பெற்றனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 7 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சங்கரா கல்வி குழுமத்தின் தலைவி சத்தியகுமாரி கோவிந்தராஜன், பள்ளி தாளாளர் விஜயலட்சுமி, முதல்வர் சுகந்தி, துணை முதல்வர் அஸ்வனியா, பெற்றோர் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி, நிர்வாக மேலாளர் சுந்தரகணேஷ், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் டாக்டர் சரவணன் மற்றும் சங்கரன் ஆகியோர் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டினர்.